வேர்ல்பூல் ஆஃப் இந்தியா வருவாய் 2 சதவீதம் வளர்ச்சி.. லாபம் ரூ.75 கோடி..

 
லாக்டவுனால் 10 நாள் வியாபாரம் போச்சு…… வேர்ல்பூல் இந்தியா லாபம் ரூ.92 கோடியாக குறைந்தது….

வேர்ல்பூல் ஆஃப் இந்தியா நிறுவனம் 2023 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.74.88 கோடி ஈட்டியுள்ளது. 

நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான வேர்ல்பூல் ஆஃப் இந்தியா நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. வேர்ல்பூல் ஆஃப் இந்தியா நிறுவனம் 2023 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.74.88 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 10.6 சதவீதம் குறைவாகும். 2022 ஜூன் காலாண்டில் வேர்ல்பூல் ஆஃப் இந்தியா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.83.73 கோடி ஈட்டியிருந்தது.

வேர்ல்பூல் இந்தியா

2023 ஜூன் காலாண்டில் வேர்ல்பூல் ஆஃப் இந்தியா நிறுவனம் வருவாயாக ரூ.2,039 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 2 சதவீதம் குறைவாகும். பிராந்தியங்களில் இடைவிடாத மழை மற்றும் பணவீக்க அழுத்தத்தின் தொடர்ச்சி ஆகியவை நுகர்வோ செலவினங்களை பாதித்தது. இதனால் சந்தையில் நுகர்வோர் சாதனங்களுக்கான தேவை குறைந்தது. 

லாக்டவுனால் 10 நாள் வியாபாரம் போச்சு…… வேர்ல்பூல் இந்தியா லாபம் ரூ.92 கோடியாக குறைந்தது….

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, வேர்ல்பூல் ஆஃப் இந்தியா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.33 சதவீதம் அதிகரித்து ரூ.1,639.55ஆக இருந்தது.