வருண் பீவரேஜஸ் வருவாய் 28 சதவீதம் வளர்ச்சி... லாபம் ரூ.82 கோடி..

 
 வருண் பீவரேஜஸ்

வருண் பீவரேஜஸ் நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.81.5 கோடி ஈட்டியுள்ளது. 

 பெப்சிகோவின் மிகப்பெரிய பிரான்சிசைஸ் பாட்டிலரான வருண் பீவரேஜஸ் அண்மையில் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. வருண் பீவரேஜஸ் நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.81.5 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 150 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் வருண் பீவரேஜஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.32.5 கோடி ஈட்டியிருந்தது.

 வருண் பீவரேஜஸ்

2022 டிசம்பர் காலாண்டில் வருண் பீவரேஜஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.2,214 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 27.7 சதவீதம் அதிகமாகும். 2022 டிசம்பர் காலாண்டில் வருண் பீவரேஜஸ் நிறுவனத்தின் விற்பனை 17.8 சதவீதம் உயர்ந்துள்ளது. வருண் பீவரேஜஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டுக்கு பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.1. இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது.

 வருண் பீவரேஜஸ்

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, வருண் பீவரேஜஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.39 சதவீதம் குறைந்து ரூ.1,312.55ஆக இருந்தது.