டிசம்பர் காலாண்டில் அதிக நஷ்டத்தை சந்தித்த டாப் 10 நிறுவனங்கள் பட்டியலில் முதலிடத்தில் வோடாபோன் ஐடியா

டிசம்பர் காலாண்டில் அதிக நஷ்டத்தை சந்தித்த டாப் 10 நிறுவனங்கள் பட்டியலில் முதலிடத்தில் வோடாபோன் ஐடியா உள்ளது.
பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது கடந்த டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளன. பல நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது, பல நிறுவனங்களின் முடிவுகள் ஏமாற்றமாக இருந்தது. சில நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து இருந்தன. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் கடந்த டிசம்பர் காலாண்டில் அதிக நஷ்டத்தை சந்தித்த டாப் 10 நிறுவனங்கள் பட்டியலில் வோடாபோன் ஐடியா முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் என்.எல்.சி. மற்றும் எம்.ஆர்.பி.எல். ஆகிய 2 பொதுத்துறை நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.
நிறுவனங்கள் டிசம்பர் காலாண்டு நஷ்டம்…
வோடாபோன் ஐடியா ரூ.7,990 கோடி
டாடா ஸ்டீல் ரூ.2,224 கோடி
இண்டஸ் டவர் ரூ.708 கோடி
என்.எல்.சி. ரூ.396 கோடி
பேடிஎம் ரூ.392 கோடி
சோமாட்டோ ரூ.347 கோடி
டாடா டெலிசர்வீசஸ் ரூ.280 கோடி
அலோக் இண்டஸ்ட்ரீஸ் ரூ.250 கோடி
இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட் ரூ.237 கோடி
எம்.ஆர்.பி.எல். ரூ.200 கோடி