இந்தியா சிமெண்ட்ஸ் வருவாய் 10 சதவீதம் வளர்ச்சி.. லாபம் ரூ.133 கோடி

 
இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட்

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.133.29 கோடி ஈட்டியுள்ளது. 

பிரபல சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான தி இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட்  அண்மையில் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.133.29 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாகும். அந்த காலாண்டில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.16.24 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

இந்தியா சிமெண்ட்ஸ்

2022 டிசம்பர் காலாண்டில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1,281 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 10.37 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1,160.63 கோடி ஈட்டியிருந்தது. 2022 டிசம்பர் காலாண்டில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.1,457.63 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட்

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.13 சதவீதம் குறைந்து ரூ.188.20ஆக இருந்தது.