டி.சி.எஸ். லாபம் ரூ.9,769 கோடி.. இடைக்கால டிவிடெண்ட் ரூ.7 அறிவிப்பு..

 
டி.சி.எஸ்.

டி.சி.எஸ். நிறுவனம் 2021 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.9,769 கோடி ஈட்டியுள்ளது. 

நாட்டின் மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. டி.சி.எஸ். நிறுவனம் 2021 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.9,769 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 12.3 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் டி.சி.எஸ். நிறுவனம் நிகர லாபமாக ரூ.8,701 கோடி ஈட்டியிருந்தது.

டி.சி.எஸ்.

2021 டிசம்பர் காலாண்டில் டி.சி.எஸ். நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.48,885 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 16.3 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் டி.சி.எஸ். நிறுவனத்தின்  செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.42,015 கோடியாக இருந்தது.  டி.சி.எஸ். நிறுவனம் இந்த நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு மூன்றாவது இடைக்கால டிவிடெண்டாக  ரூ.7 வழங்குவதாக அறிவித்துள்ளது.

டாடா சன்ஸ் லாபம் ரூ.6,512 கோடி.. செலவினம் 22 சதவீதம் குறைவு…

டி.சி.எஸ். நிறுவனம் தனது பங்குகளை ஒரு பங்கின் விலை ரூ.4,500 என்ற அடிப்படையில் ரூ.18,000 கோடிக்கு பங்குகளை திரும்ப வாங்குவதாக அறிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது டி.சி.எஸ். நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.05 சதவீதம் உயர்ந்து ரூ.3,897.65ஆக இருந்தது.