டாடா மோட்டார்ஸ் லாபம் ரூ.5,408 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.2 இறுதி டிவிடெண்ட்..

 
தொழில்ல நஷ்டம் வராதுன்னு சொல்ல முடியாது ஆனா அதுக்காக இப்படியா? ரத்த கண்ணீர் வடிக்கும் டாடா மோட்டார்ஸ்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.5,407.8 கோடி ஈட்டியுள்ளது. 

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.5,407.8 கோடி ஈட்டியுள்ளது. 2022 மார்ச் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,032 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

டாடா மோட்டார்ஸ்

2023 மார்ச் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் வருவாயாக ரூ.1,05,932 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 35 சதவீதம் அதிகமாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.2 இறுதி டிவிடெண்டும், டி.வி.ஆர். பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.2.10 இறுதி டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதேசமயம் இது நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.78 சதவீதம் உயர்ந்து ரூ.515.65ஆக இருந்தது.