டாடா கெமிக்கல்ஸ் வருவாய் 32 சதவீதம் வளர்ச்சி.. லாபம் ரூ.391 கோடி..

 
டாடா கெமிக்கல்ஸ்

டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில்  நிகர லாபமாக ரூ.391 கோடி ஈட்டியுள்ளது.

டாடா குழுமத்தை சேர்ந்த டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் அண்மையில் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டது. டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில்  நிகர லாபமாக ரூ.391 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 25.72 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம்  நிகர லாபமாக ரூ.311 கோடி ஈட்டியிருந்தது.

டாடா கெமிக்கல்ஸ்

2022 டிசம்பர் காலாண்டில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.4,148 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 32 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.3,141  கோடி ஈட்டியிருந்தது. 2022 டிசம்பர் காலாண்டில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின்  மொத்த செலவினம் 24.14 சதவீதம் உயர்ந்து ரூ.3,560  கோடியாக அதிகரித்துள்ளது.

டாடா கெமிக்கல்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, டாடா கெமிக்கல்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.01 சதவீதம் குறைந்து ரூ.954.60ஆக இருந்தது.