சன் டிவி நெட்வொர்க் லாபம் ரூ.396 கோடி.. இடைக்கால டிவிடெண்ட் அறிவிப்பு

 
சன் டிவி நெட்வொர்க்

சன் டிவி நெட்வொர்க் 2021 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.395.55 கோடி ஈட்டியுள்ளது.  

நாட்டின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றான சன் டிவி நெட்வொர்க் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. சன் டிவி நெட்வொர்க் 2021 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.395.55 கோடி ஈட்டியுள்ளது.  2020 செப்டம்பர் காலாண்டில் சன் டிவி நெட்வொர்க்  நிறுவனம் நிகர லாபமாக ரூ.335.02 கோடி ஈட்டியிருந்தது.

சன் டிவி

2021 செப்டம்பர் காலாண்டில் சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.848.67 கோடியாக உயர்ந்துள்ளது. 2020 செப்டம்பர் காலாண்டில் சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.768.69 கோடி ஈட்டியிருந்தது. 2021 செப்டம்பர் காலாண்டில் சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.385.20 கோடியாக உள்ளது.

டிவிடெண்ட்

சன் டிவி நெட்வொர்க்  நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, 2021-22ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.2.50 இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த பிறகு சன் டிவி நெட்வொர்க் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.73 சதவீதம் குறைந்து ரூ.539.20ஆக இருந்தது.