குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை

 
விடுமுறை

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முக்கிய மதங்களில் ஒன்றான சீக்கியம். இந்த மதத்தை தோற்றுவித்தவர் குருநானக். இவரது பிறந்த நாளை குருநானக் குருபுரப் அல்லது குருநானக் ஜெயந்தி என்ற பெயரில் உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று குருநானக்கின் பிறந்த நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றனது.

குரு நானக் ஜெயந்தி

அதன்படி, இன்று ( கார்த்திகை மாத பௌர்ணமி தினம்) குருநானக் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் நடைபெறாது. வரும் திங்கட்கிழமை முதல் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வழக்கம் போல் நடைபெறும்.

மும்பை பங்குச் சந்தை

இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இந்த வாரம் பங்குச் சந்தைகளில் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.