வரும் செப்டம்பரில் 20 தினங்கள் மட்டுமே பங்குச் சந்தைகளில் வர்த்தகம்

 
மும்பை பங்குச் சந்தை

எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இந்திய பங்குச் சந்தைகளில் மொத்தம் 20 தினங்கள் வர்த்தகம் நடைபெறும்.

இந்திய பங்குச் சந்தைகளில் பொதுவாக திங்கள் முதல் வெள்ளி வரை பங்கு வர்த்தகம் நடைபெறும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நடைபெறாது. அதேசமயம் குடியரசு தினம், சுதந்திர தினம், தீபாவளி உள்ளிட்ட முக்கிய தினங்கள் வர்த்தக தினங்களில் வந்தால் அன்று பங்குச் சந்தைகள் செயல்படாது. 

விநாயகர் சதுர்த்தி

அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கும் இந்திய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வாடிக்கை. இந்த ஆண்டு செப்டம்பர் 19ம் தேதியன்று விநாயக சதுர்த்தி பண்டிகை வருகிது. அதனால் அன்றைய தினம் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நடைபெறாது. ஆகையால்  செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 20 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும்.