குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை

 
குடியரசு தினம்

குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பங்குச் சந்தைகளில் பொதுவாக திங்கள் முதல் வெள்ளி வரை பங்கு வர்த்தகம் நடைபெறும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நடைபெறாது. அதேசமயம் குடியரசு தினம், சுதந்திர தினம், தீபாவளி உள்ளிட்ட முக்கிய தினங்கள் வர்த்தக தினங்களில் வந்தால் அன்று பங்குச் சந்தைகள் செயல்படாது. 

விடுமுறை

அந்த வகையில் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (ஜனவரி 26) பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பங்குச் சந்தைகள் வழக்கம் போல் இயங்கும். ஆக,  இந்த வாரம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம். நேற்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது.