எஸ்.பி.ஐ. லாபம் ரூ.16,695 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.11.30 டிவிடெண்ட்..

 
பண்டிகை காலத்தில் குறைந்த வட்டியில் வாகன மற்றும் வீட்டுக் கடன்கள்.. ஸ்டேட் வங்கி அதிரடி அறிவிப்பு..

எஸ்.பி.ஐ. 2023 மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.16,695 கோடி ஈட்டியுள்ளது. 

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ.) தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. எஸ்.பி.ஐ. 2023 மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.16,695 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 83 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் எஸ்.பி.ஐ. நிகர லாபமாக ரூ.9,113 கோடி ஈட்டியிருந்தது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

2023 மார்ச் காலாண்டில் எஸ்.பி.ஐ.யின் நிகர வட்டி வருவாய் (வட்டி வரவுக்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாசம்) ரூ.40,393 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 29 சதவீதம்  அதிகமாகும். அந்த காலாண்டில் எஸ்.பி.ஐ.யின் நிகர வட்டி வருவாய் ரூ.31,198 கோடியாக இருந்தது.  2023 மார்ச் காலாண்டில் எஸ்.பி.ஐ.யின் வழங்கிய கடன் 16 சதவீதமும், திரட்டி டெபாசிட் 9 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது. 

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

எஸ்.பி.ஐ. இயக்குனர்கள் குழு கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.11.30 டிவிடெண்ட் அறிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, எஸ்.பி.ஐ. பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.16 சதவீதம் உயர்ந்து ரூ.575.05ஆக இருந்தது.