வாராக்கடன் குறைந்தது… பாரத ஸ்டேட் வங்கி நிகர லாபம் ரூ.5,196 கோடி..

 

வாராக்கடன் குறைந்தது… பாரத ஸ்டேட் வங்கி நிகர லாபம் ரூ.5,196 கோடி..

பாரத ஸ்டேட் வங்கி 2020 டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.5,196.22 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி 2020 டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.5,196.22 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 6.9 சதவீதம் அதிகமாகும்.

வாராக்கடன் குறைந்தது… பாரத ஸ்டேட் வங்கி நிகர லாபம் ரூ.5,196 கோடி..
பாரத ஸ்டேட் வங்கி

2020 டிசம்பர் காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் நிகர வட்டி வருவாய் ( மொத்த வட்டி வருவாய்க்கும், வட்டி செலவினத்துக்கு இடையிலான வித்தியாசம்) ரூ.28,819.94 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 3.7 சதவீதம் அதிகமாகும். கடந்த காலாண்டில் எஸ்ஸார் ஸ்டீல் கணக்கு மீட்பு காரணமாக வட்டி வருவாய் அதிகரித்துள்ளது.

வாராக்கடன் குறைந்தது… பாரத ஸ்டேட் வங்கி நிகர லாபம் ரூ.5,196 கோடி..
பாரத ஸ்டேட் வங்கி

கடந்த டிசம்பர் காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் மொத்த வாராக்கடன் 4.77 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 1.23 சதவீதமாகவும் குறைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பாரத ஸ்டேட் வங்கி பங்கின் விலை 10.69 சதவீதம் உயர்ந்து ரூ.393.05ஆக அதிகரித்தது.