டிசம்பரில் சில்லரை விலை பணவீக்கம் அதிகரிப்பு.. நவம்பரில் தொழில்துறை உற்பத்தி 1.4 சதவீதம் வளர்ச்சி

 
உணவு பொருட்கள் மற்றும் காய்கறி விலை குறைவாம்…. அதனால மொத்த விலை பணவீக்கம் குறைஞ்சு போச்சாம்

கடந்த டிசம்பரில் சில்லரை விலை பணவீக்கம் 5.59 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த நவம்பரில் தொழில்துறை உற்பத்தி 1.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் மற்றும் கடந்த நவம்பர் மாத தொழில்துறை உற்பத்தி  குறித்த புள்ளிவிவரத்தை நேற்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டது. கடந்த டிசம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5.59 சதவீதமாக அதிகரித்துள்ளது.  இருப்பினும் இது ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ள சில்லரை விலை பணவீக்கத்துக்கான அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தை காட்டிலும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.  2021 நவம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம்  4.91 சதவீதமாக இருந்தது.

இந்திய ரிசர்வ் வங்கி

கடந்த மாதம் சில்லரை விலை பணவீக்கம் சிறிது அதிகரித்துள்ளபோதிலும், அது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு இலக்கை காட்டிலும் குறைவாக உள்ளதால், அடுத்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டி விகிதங்களை குறைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர். ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்யும்போது, சில்லரை விலை பணவீக்கத்தை முக்கியமாக கருத்தில் கொள்ளும்.

தொழில்துறை

கடந்த நவம்பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 1.4  சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2020 நவம்பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 1.6 சதவீதம் வீழ்ச்சி கண்டு இருந்தது. கடந்த டிசம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம், கடந்த நவம்பர் மாத  தொழில்துறை உற்பத்தி குறித்த புள்ளிவிவரங்கள் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபிறகு வெளிவந்தது. எனவே இதன் தாக்கம்  நாளை பங்கு வர்த்தகத்தில்  எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.