கொரோனாவால் விற்பனை மந்தம்…. ரூ.17 கோடி இழப்பை சந்தித்த புரவங்கரா

 

கொரோனாவால் விற்பனை மந்தம்…. ரூ.17 கோடி இழப்பை சந்தித்த  புரவங்கரா

2020 ஜூன் காலாண்டில் புரவங்கரா நிறுவனம் ரூ.16.93 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது.

ரியல் எஸ்டேட் நிறுவனமான புரவங்கரா தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் புரவங்கரா நிறுவனம் ரூ.16.93 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் புரவங்கரா நிறுவனம் ரூ.44 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக அந்நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவால் விற்பனை மந்தம்…. ரூ.17 கோடி இழப்பை சந்தித்த  புரவங்கரா
புரவங்கா

புரவங்கரா நிறுவனம் 2020 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த வருவாயாக ரூ.190.53 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் பல மடங்கு குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் புரவங்கரா நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.645.55 கோடியாக உயர்ந்து இருந்தது. கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரப்படி புரவங்கரா நிறுவனத்தின் கடன் ரூ.2,521 கோடியாக குறைந்துள்ளது.

கொரோனாவால் விற்பனை மந்தம்…. ரூ.17 கோடி இழப்பை சந்தித்த  புரவங்கரா
அடுக்கு மாடிக்குடியிருப்புகள்

கடந்த ஜூன் காலாண்டில் புரவங்கரா நிறுவனம் மொத்தம் 536 சொத்துக்களை விற்பனை செய்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் 638 சொத்துக்களை அந்நிறுவனம் விற்பனை செய்து இருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அந்நிறுவனத்தின் விற்பனை குறைந்துள்ளது.