லாபத்தில் கொழிக்கும் பொதுத்துறை வங்கிகள்.. டிசம்பர் காலாண்டில் 12 பொதுத்துறை வங்கிகளின் லாபம் ரூ.29,175 கோடி..

 
யூகோ வங்கி

கடந்த டிசம்பர் காலாண்டில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா உள்பட 12 பொதுத்துறை வங்கிகள் மொத்தம் 29,175 கோடி லாபம் ஈட்டியுள்ளன.

நம் நாட்டில் தற்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்பட மொத்தம் 12 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. 2022 டிசம்பர் காலாண்டில் 12 பொதுத்துறை வங்கிகளும் நல்ல லாபத்தை ஈட்டியுள்ளன. அந்த காலாண்டில் 12 பொதுத்துறை வங்கிகளும் லாபமாக மொத்தம் ரூ.29,175 கோடி ஈட்டியுள்ளன. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 65 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் பொதுத்துறை வங்கிகள் மொத்தம் ரூ.17,7129 கோடியை ஈட்டியிருந்தன.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

2022 டிசம்பர் காலாண்டில் பொதுத்துறை வங்கிகளில் லாபத்தின் சதவீத வளர்ச்சி அடிப்படையில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் லாபம் 139 சதவீதம் உயர்ந்து ரூ.775 கோடியாக அதிகரித்துள்ளது. அடுத்து யூகோ வங்கியின் லாபம் 110 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.653 கோடியாக உயர்ந்துள்ளது. யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் லாபம் 107 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.2,245 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியன் பேங்க் லாபம் 102 சதவீதம் அதிகரித்து ரூ.1,396 கோடியாக உள்ளது. 

இந்தியன் வங்கி

பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடனை பொறுத்தவரை பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவற்றின் வாராக்கடன் குறைவாக உள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மொத்த வாராக்கடன் முறையே 2.94 சதவீதம் மற்றும் 3.14 சதவீதமாக உள்ளது. மேலும் 2022 டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர வாராக் கடன் 0.47 சதவீதம் மற்றும் 0.77 சதவீதமாக குறைந்துள்ளது.