பவர் கிரிட் கார்ப்பரேஷன் லாபம் ரூ.4,320 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.4.75 இறுதி டிவிடெண்ட்..

 
குவிந்தது வருவாய்… ரூ.3,368 கோடியை லாபமாக அள்ளிய பவர் கிரிட்..

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.4,320 கோடி ஈட்டியுள்ளது. 

மத்திய அரசுக்கு சொந்தமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.4,320 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 4 சதவீதம் அதிகமாகும். 

அரசு நிறுவனம்தான்….வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சு… பவர் கிரிட் லாபம் ரூ.2,048.42 கோடி

2023 மார்ச் காலாண்டில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.12,264 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 15 சதவீதம் அதிகமாகும்.  பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.4.75 இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது.

டிவிடெண்ட்

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.64 சதவீதம் குறைந்து ரூ.233.80ஆக இருந்தது.