இதுவரை இல்லாத அளவுக்கு பாக்சைட் உற்பத்தி.. நால்கோ லாபம் ரூ.1,300 கோடி...

 
நால்கோ

நால்கோ (நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்) நிறுவனம் கடந்த 2020-21ம் நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.1,299.53 கோடி ஈட்டியுள்ளது. 

மத்திய சுரங்க அமைச்சகத்தில்கீழ் செயல்படும் நவரத்னா அந்தஸ்து கொண்ட நிறுவனம் நால்கோ (நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்). சுரங்கம், உலோகம் மற்றும் மின்சாரம் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட செயல்பாடுகளை அந்நிறுவனம் கொண்டுள்ளது. நால்கோ நிறுவனம் கடந்த 2020-21ம் நிதியாண்டில் தனது நிகர லாபம் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது தெரிவித்துள்ளது.

நால்கோ

நால்கோ (நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்) நிறுவனம் கடந்த 2020-21ம் நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.1,299.53 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 840 சதவீதம் அதிகமாகும். நால்கோ நிறுவனம் 2019-20ம் நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.138 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது. மேலும் நால்கோ நிறுவனம் தொடங்கியது முதல் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 2020-21ம் நிதியாண்டில் 73.65 லட்சம் டன் பாக்சைட் உற்பத்தி செய்துள்ளது.

நால்கோ

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது நால்கோ நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.13 சதவீதம் உயர்ந்து ரூ.103.05ஆக இருந்தது.