முத்தூட் பைனான்ஸ் லாபம் ரூ.927 கோடி.. டிசம்பர் காலாண்டில் புதிதாக 54 கிளைகள் திறப்பு

 
லாக்டவுன் முடக்கினாலும் கை கொடுத்த டிஜிட்டல்…. முத்தூட் பைனான்ஸ் லாபம் ரூ.858 கோடி..

முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.927 கோடி ஈட்டியுள்ளது. 

வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் அண்மையில் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.927 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 11 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,040 கோடி ஈட்டியிருந்தது.

களை கட்டிய தங்க நகை கடன்…. ரூ.836 கோடி லாபம் பார்த்த முத்தூட் பைனான்ஸ்

2022 டிசம்பர் காலாண்டில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் புதிதாக 54 கிளைகளை திறந்துள்ளது. 28 மற்றும் 29வது பாதுகாக்கப்பட்ட பொது வெளியீட்டில் மீட்டெடுக்கக்கூடிய மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ.422 கோடி திரட்டப்பட்டது என்று முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

களை கட்டிய தங்க நகை கடன்…. ரூ.836 கோடி லாபம் பார்த்த முத்தூட் பைனான்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, முத்தூட் பைனான்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.09 சதவீதம் குறைந்து ரூ.942.25ஆக இருந்தது.