எல் அண்ட் டி லாபம் ரூ.3,987 கோடி. பங்கு ஒன்றுக்கு ரூ.24 இறுதி டிவிடெண்ட்..

 
எல் அண்ட் டி

எல் அண்ட் டி நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில்  நிகர லாபமாக ரூ.3,987 கோடி ஈட்டியுள்ளது. 

என்ஜினீயரிங் மற்றும் கட்டுமான வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் லார்சன் அண்ட் டூப்ரோ (எல் அண்ட் டி) தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. எல் அண்ட் டி நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில்  நிகர லாபமாக ரூ.3,987 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும்.

எல் அண்ட் டி

2023 மார்ச் காலாண்டில் எல் அண்ட் டி நிறுவனம்  செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.58,335.15 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 10.4 சதவீதம் அதிகமாகும். எல் அண்ட் டி நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.24 இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது.

எல் அண்ட் டி

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, எல் அண்ட் டி நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 5.29 சதவீதம் குறைந்து ரூ.2,241.65ஆக இருந்தது.