கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் லாபம் ரூ.140 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.7 இறுதி டிவிடெண்ட்..

 
கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன்

கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.140 கோடி ஈட்டியுள்ளது. 

கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.140 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 22 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.115 கோடி ஈட்டியிருந்தது.

கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன்

2023 மார்ச் காலாண்டில் கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.4,896 கோடி ஈட்டியுள்ளது. 2022 மார்ச் காலாண்டில் கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.4,169 கோடி ஈட்டியிருந்தது. கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.7 இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது.

கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன்

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.66 சதவீதம் குறைந்து ரூ.528.25ஆக இருந்தது.