இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லாபம் ரூ.10,841 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.3 டிவிடெண்ட்..

 
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.10,841  கோடி ஈட்டியுள்ளது. 

பொதுத்துறை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.) நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டின் நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.10,841  கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 52 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.7,089 கோடி ஈட்டியுள்ளது.

திடீரென குறைந்த கச்சா எண்ணெய் விலை…. ரூ.5,185 கோடி நஷ்டத்தை சந்தித்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

2023 மார்ச் காலாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.2.30 லட்சம் கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.2.09 லட்சம் கோடியாக இருந்தது.

திடீரென குறைந்த கச்சா எண்ணெய் விலை…. ரூ.5,185 கோடி நஷ்டத்தை சந்தித்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இயக்குனர்கள் குழு கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.3 இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.57 சதவீதம் உயர்ந்து ரூ.87.50ஆக இருந்தது.