‘மாணவர்களுக்கு சம்பளத்துடன் இன்டர்ன்ஷிப் பயிற்சி- பிளிப்கார்ட் அறிவிப்பு !

‘மாணவர்களுக்கு சம்பளத்துடன் இன்டர்ன்ஷிப் பயிற்சி- பிளிப்கார்ட் அறிவிப்பு !

பிளிப்கார்ட் நிறுவனம் மாணவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு திறன் பயிற்சியை (இன்டர்ன்ஷிப் ) அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

‘லாஞ்ச்பேட்” என்ற பெயரில் 45 நாட்களுக்கான இன்டர்ன்ஷிப் பயிற்சியை மாணவர்களுக்கு அளிக்க உள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. அதன் படி, இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள மாணவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம் என்றும் இது சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு திறன் பயிற்சி என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

‘மாணவர்களுக்கு சம்பளத்துடன் இன்டர்ன்ஷிப் பயிற்சி- பிளிப்கார்ட் அறிவிப்பு !

மேலும், இந்த பயிற்சியின் போது, ஆன்லைன் விற்பனையின் முதுகெலும்பாக கருதப்படும் வினியோக முறைகளில் உள்ள தொழில்திறன்களை வளர்த்துக்கொள்ளவும், சப்ளை செயின் தொடர்பான அனுபவம் பெறவும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

‘மாணவர்களுக்கு சம்பளத்துடன் இன்டர்ன்ஷிப் பயிற்சி- பிளிப்கார்ட் அறிவிப்பு !

பண்டிகை கால விற்பனையை முன்னிட்டு 70 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும், வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவித்து இருந்த பிளிப்கார்ட், தற்போது மாணவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய இன்டர்ன்ஷிப் பயிற்சியும் அளிக்க முன்வந்துள்ளது. இதற்காக பிளிப்கார்ட் நிறுவனம், நாடெங்கிலும் உள்ள 21 கல்வி நிலையங்களுடன் உடன்பாடு செய்துள்ளதாகவும் தெரிகிறது. இதன் மூலம் பண்டிகை கால விற்பனையை பெரிய அளவில் பிளிப்கார்ட் எதிர்நோக்கி உள்ளது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

  • எஸ். முத்துக்குமார்