இன்போசிஸ் லாபம் ரூ.5,809 கோடி... வருவாய் 23 சதவீதம் அதிகரிப்பு..

 
முறைகேடு புகார் எதிரொலி! ஒரே நாளில் இன்போசிஸ் முதலீட்டாளர்களுக்கு ரூ.53 ஆயிரம் கோடி நஷ்டம்!

இன்போசிஸ் நிறுவனம் 2021 டிசம்பர் காலாண்டில்  நிகர லாபமாக ரூ.5.809 கோடி ஈட்டியுள்ளது. 

நாட்டின் 2வது பெரிய ஐ.டி. சேவைகள் நிறுவனமான இன்போசிஸ் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனம் 2021 டிசம்பர் காலாண்டில்  நிகர லாபமாக ரூ.5.809 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 12 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் நிகர லாபமாக ரூ.5,197 கோடி ஈட்டியிருந்தது.

கோடீஸ்வரர்கள் நிறைந்த இன்போசிஸ் நிறுவனம்… கோடீஸ்வர பணியாளர்களின் எண்ணிக்கை 74ஆக உயர்ந்தது

2021 டிசம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.31,867 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 22.91 சதவீதம் அதிகமாகும். 2020 டிசம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.25,927 கோடி ஈட்டியிருந்தது. 

இன்போசிஸ்

இன்போசிஸ் நிறுவனம் நிலையான  ரூபாய் மதிப்பு அடிப்படையில் 2021-22ம் நிதியாண்டுக்கான தனது வழிகாட்டுதலை (வருவாய் வளர்ச்சி அளவீடு)  19.5-20 சதவீதமாக உயர்த்தியுள்ளது. முந்தைய மதிப்பீடில் இது  16.5-17.5 சதவீதமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது இன்போசிஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.16 சதவீதம் உயர்ந்து ரூ.1,877.60ஆக இருந்தது.