இண்டிகோ வருவாய் ரூ.14,160 கோடி.. லாபம் ரூ.919 கோடி..

 
விமானியறையில் தீப்பற்றியதால் இண்டிகோ விமானம் அவசரமாக ஹைதராபாத்தில் தரையிறங்கியது :

இண்டிகோ நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.919 கோடி ஈட்டியுள்ளது. 

விமான சேவையில் ஈடுபட்டு வரும் இன்டர்குளோப் ஏவியேஷன் (இண்டிகோ) நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.919 கோடி ஈட்டியுள்ளது. 2022 மார்ச் காலாண்டில் இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1,682 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. 2022 டிசம்பர் காலாண்டில் இண்டிகோ நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,423 கோடி ஈட்டியிருந்தது.

இண்டிகோ விமான நிறுவனத்தின் லாப கனவை சிதைத்த லாக்டவுன்… ரூ.871 கோடி நஷ்டம்..

2023 மார்ச் காலாண்டில் இண்டிகோ நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.14,160 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 76 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இண்டிகோ நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.8,021 கோடி ஈட்டியிருந்தது. 2023 மார்ச் காலாண்டில் இண்டிகோ நிறுவனத்தின் மொத்த செலவினம் 38 சதவீதம் அதிகரித்து ரூ.13,680 கோடியாக உயர்ந்துள்ளது.

இண்டிகோ விமான நிறுவனத்தின் லாப கனவை சிதைத்த லாக்டவுன்… ரூ.871 கோடி நஷ்டம்..

2023 மார்ச் இறுதி நிலவரப்படி, இண்டிகோ நிறுவனத்திடம் மொத்தம் 304 விமானங்கள் உள்ளன.  மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, இண்டிகோ நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.09 சதவீதம் உயர்ந்து ரூ.2,289.05ஆக இருந்தது.