கடந்த ஏப்ரலில் தொழில்துறை உற்பத்தியில் 134 சதவீதம் வளர்ச்சி

 

கடந்த ஏப்ரலில் தொழில்துறை உற்பத்தியில் 134 சதவீதம் வளர்ச்சி

2021 ஏப்ரல் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 134 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகிய முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 2021 ஏப்ரல் மாதத்தில் 56 சதவீதம் வளர்ச்சி கண்டது அதனால் அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தியும் ஏற்றம் கண்டுதான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை கணக்கிடுவதில் முக்கிய 8 துறைகளின் பங்கு 40 சதவீதம் உள்ளது. அதனால் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி குறைந்தாலும், ஏற்றம் கண்டாலும் அதன் தாக்கம் தொழில்துறை உற்பத்தியில் வெளிப்படும்.

கடந்த ஏப்ரலில் தொழில்துறை உற்பத்தியில் 134 சதவீதம் வளர்ச்சி
கொரோனா வைரஸ்

எதிர்பார்த்தது போலவே 2021 ஏப்ரல் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 134.44 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலையை கட்டுப்படுத்துவதற்காக 2020 மார்ச் இறுதி முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி பெயரளவுக்குதான் நடந்தது. இதனால்தான் 2021 ஏப்ரல் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி பெரிய அளவு வளர்ச்சி கண்டுபோல் தெரிகிறது.

கடந்த ஏப்ரலில் தொழில்துறை உற்பத்தியில் 134 சதவீதம் வளர்ச்சி
ஊரடங்கு

கொரோனா வைரஸ் 2வது அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், பெரும்பாலான மாநிலங்கள் கடந்த மே மாதத்தில் ஊரடங்கை அமல்படுத்தின. இதனால் பொருளாதார நடவடிக்கைககள் முடங்கி கிடந்தது. இதனால் கடந்த மே மாதத்தில் தொழில்துறை உற்பத்தி பாதிப்பை சந்தித்து இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.