ஹீரோ மோட்டோகார்ப், ராயல் என்பீல்டு விற்பனை அமோகம்.. டி.வி.எஸ். வாகன விற்பனை மந்தம்

 
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் லாபம் ரூ.1,029 கோடி, இடைக்கால, சிறப்பு டிவிடெண்டுகள் அறிவிப்பு

கடந்த பிப்ரவரியில் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ராயல் என்பீல்டு ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 3,94,460 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2022 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மொத்தம் 3,58,254 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

ராயல் என்பீல்டு

பிரபல புல்லட் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்டு கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 71,544 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2022 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் 21 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் மொத்தம் 59,160 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி

இரு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 2,76,150 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 1.97 சதவீதம் குறைவாகும். 2022 பிப்ரவரி மாதத்தில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி  மொத்தம் 2,81,714 வாகனங்களை விற்பனை  செய்து இருந்தது.