கெயில் இந்தியா வருவாய் 22 சதவீதம் வளர்ச்சி... லாபம் ரூ.604 கோடி..

 
கெயில் லாபம் ரூ.255 கோடி… போன வருஷத்தை காட்டிலும் 80 சதவீதம் குறைவு..

கெயில் (இந்தியா) நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் லாபமாக ரூ.604 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு விற்பனையாளர் மற்றும் டிரான்ஸ்போர்ட்டரான கெயில் (இந்தியா) நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டது. கெயில் (இந்தியா) நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் லாபமாக ரூ.604 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 77 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் கெயில் (இந்தியா) நிறுவனம் லாபமாக ரூ.2,683 கோடி ஈட்டியிருந்தது.

கெயில் லாபம் ரூ.255 கோடி… போன வருஷத்தை காட்டிலும் 80 சதவீதம் குறைவு..

கடந்த 2022-23ம் நிதியாண்டில் கெயில் (இந்தியா) நிறுவனம் லாபமாக ரூ.5,301 கோடியாக குறைந்துள்ளது. 2021-22ம் நிதியாண்டில் கெயில் (இந்தியா) நிறுவனம் லாபமாக ரூ.10,364 கோடி ஈட்டியிருந்தது. 2023 மார்ச் காலாண்டில் கெயில் (இந்தியா) நிறுவனம் வருவாயாக ரூ.32,858 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 22 சதவீதம் அதிகமாகும்.

கெயில் லாபம் ரூ.255 கோடி… போன வருஷத்தை காட்டிலும் 80 சதவீதம் குறைவு..

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்த போது, கெயில் (இந்தியா) நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.08 சதவீதம் உயர்ந்து ரூ.107.45ஆக இருந்தது.