எஸ்கார்ட்ஸ் குபோடா லாபம் ரூ.186 கோடி.. 3 மாதத்தில் 28,025 டிராக்டர்கள் விற்பனை..

 
எஸ்கார்ட்ஸ் குபோடா

எஸ்கார்ட்ஸ் குபோடா நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில்  நிகர லாபமாக ரூ.186.4 கோடி ஈட்டியுள்ளது. 

பிரபல டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான எஸ்கார்ட்ஸ் குபோடா அண்மையில் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. எஸ்கார்ட்ஸ் குபோடா நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில்  நிகர லாபமாக ரூ.186.4 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 7.5 சதவீதம் குறைவாகும். மூலபொருட்களின்  விலை அதிகரிப்பு காரணமாக லாப வரம்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுனம் தெரிவித்துள்ளது.

எஸ்கார்ட்ஸ் குபோடா

2022 டிசம்பர் காலாண்டில் எஸ்கார்ட்ஸ் குபோடா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.2,263.7 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 14.8 சதவீதம் அதிகமாகும். மேலும் கடந்த டிசம்பர் காலாண்டில் எஸ்கார்ட்ஸ் குபோடா நிறுவனத்தின் மொத்த செலவினம் 22.3 சதவீதம் உயர்ந்து ரூ.2,114 கோடியாக அதிகரித்துள்ளது. 2022 டிசம்பர் காலாண்டில் எஸ்கார்ட்ஸ் குபோடா நிறுவனத்தின் டிராக்டர் விற்பனை 10.7 சதவீதம் அதிகரித்து 28,025 டிராக்டர்களாக உயர்ந்துள்ளது.

எஸ்கார்ட்ஸ் குபோடா

கட்டுமான கருவிகளின் விற்பனை 5 சதவீதம் உயர்ந்து 1,209ஆக அதிகரித்துள்ளது. மேலும் ரயில்வே வர்த்தக பிரிவு வாயிலான வருவாய் 43.4 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, எஸ்கார்ட்ஸ் குபோடா  நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.39 சதவீதம் குறைந்து ரூ.2,005.05ஆக இருந்தது.