இமாமி நிறுவன வருவாய் ரூ.983 கோடி.. லாபம் 6 சதவீதம் வளர்ச்சி..

 
இமாமி

இமாமி நிறுவனம்  2022 டிசம்பர் காலாண்டில்  ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.232.97 கோடி ஈட்டியுள்ளது. 

வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் துறையை சேர்ந்த இமாமி நிறுவனம் அண்மையில் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இமாமி நிறுவனம்  2022 டிசம்பர் காலாண்டில்  ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.232.97 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 6.12 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இமாமி நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.219.52 கோடி ஈட்டியிருந்தது.

இமாமி

2022 டிசம்பர் காலாண்டில் இமாமி நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.982.72 கோடி ஈட்டியுள்ளது. 2021 டிசம்பர் காலாண்டில் இமாமி நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.971.06 கோடி ஈட்டியிருந்தது. ஆக, கடந்த டிசம்பர் காலாண்டில் இமாமி நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 1.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2022 டிசம்பர் காலாண்டில் இமாமி நிறுவனத்தின் மொத்த செலவினம் 9.36 சதவீதம் உயர்ந்து ரூ.688.47 கோடியாக உயர்ந்துள்ளது.

இமாமி

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, இமாமி நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்த காட்டிலும் 0.09 சதவீதம் உயர்ந்து  ரூ.370.40ஆக இருந்தது.