எய்ஷர் மோட்டார்ஸ் வருவாய் 17 சதவீதம் வளர்ச்சி.. லாபம் ரூ.918 கோடி..

எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனம் 2023 ஜூன் காலாண்டில் லாபமாக ரூ.918 கோடி ஈட்டியுள்ளது.
ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் மற்றும் வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனம் 2023 ஜூன் காலாண்டில் லாபமாக ரூ.918 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 50.38 சதவீதம் அதிகமாகும்.
2023 ஜூன் காலாண்டில் எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனம் வருவாயாக ரூ.3,986.37 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 17.33 சதவீதம் அதிகமாகும். கடந்த ஜுன் காலாண்டில் எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு வாயிலான வருவாய் ரூ.33.11-லிருந்து ரூ.33.57ஆக அதிகரித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.55 சதவீதம் உயர்ந்து ரூ.3,407.05ஆக இருந்தது.