டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் லாபம் ரூ.960 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.40 இறுதி டிவிடெண்ட்..

 
டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் லாபம் ரூ.553.5 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.25 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.960.1 கோடி ஈட்டியுள்ளது. 

மருந்து துறையை சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.960.1 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 890 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.97 கோடி ஈட்டியிருந்தது.

டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் லாபம் ரூ.553.5 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.25 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

2023 மார்ச் காலாண்டில் டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.5,843 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 15.28 சதவீதம் அதிகமாகும். 2022 மார்ச் காலாண்டில் டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.5,068.4 கோடி ஈட்டியுள்ளது. 2023 மார்ச் காலாண்டில் டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் நிறுவனத்தின் மொத்த செலவினம் 4 சதவீதம் குறைந்து ரூ.5,132.2 கோடியாக உள்ளது.

கொரோனா காலத்தில் லாபத்தை அள்ளிய டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ்…. ஒரே காலாண்டில் ரூ.764 கோடி  லாபம்..

டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.40 இறுதி டிவிடெண்டாக வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக  தினத்தை காட்டிலும் 6.89 சதவீதம் குறைந்து ரூ.4,532.40ஆக இருந்தது.