கிரெடிட் அக்சஸ் கிராமீன் லாபம் ரூ.60 கோடி.. மொத்த வருவாய் 7 சதவீதம் வளர்ச்சி

 
கிரெடிட் அக்சஸ் கிராமீன்

கிரெடிட் அக்சஸ் கிராமீன் நிறுவனம் 2021 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.59.7 கோடி ஈட்டியுள்ளது.

மைக்ரோபைனான்ஸ் நிறுவனமான கிரெடிட் அக்சஸ் கிராமீன் நிறுவனம் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. கிரெடிட் அக்சஸ் கிராமீன் நிறுவனம் 2021 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.59.7 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 25 சதவீதம் குறைவாகும். 2020 செப்டம்பர் காலாண்டில் கிரெடிட் அக்சஸ் கிராமீன் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.79.6 கோடி ஈட்டியுள்ளது.

கிரெடிட் அக்சஸ் கிராமீன்

2021 செப்டம்பர் காலாண்டில் கிரெடிட் அக்சஸ் கிராமீன் நிறுவனத்தின் மொத்த வருவாய் 7.2 சதவீதம் உயர்ந்து ரூ.618.6 கோடி ஈட்டியுள்ளது. இதில் நிகர வட்டி வருவாய் 11.5 சதவீதம் உயர்ந்து ரூ.369 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2021 செப்டம்பர் காலாண்டில் கிரெடிட் அக்சஸ் கிராமீன் நிறுவனம் நாடு முழுவதுமாக புதிதாக 121 கிளைகளை திறந்துள்ளது. மேலும் அந்த காலாண்டில் 1.4 லட்சம் புதிய கடன் வாங்குபவர்களை பெற்றுள்ளது.

வாராக் கடன்

2021 செப்டம்பர் காலாண்டு நிலவரப்படி, கிரெடிட் அக்சஸ் கிராமீன் நிறுவனத்தின் தனிப்பட்ட முறையில் மொத்த நிகர வாராக் கடன் 7.2 சதவீதமாக உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, கிரெடிட் அக்சஸ் கிராமீன் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.11 சதவீதம் குறைந்து ரூ.584.15ஆக இருந்தது.