கோல்கேட் பாமோலிவ் லாபம் ரூ.316 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.21 இடைக்கால டிவிடெண்ட்..

 
கோல்கேட்-பாமோலிவ் நிகர லாபம் ரூ.233 கோடி… வருவாய் 12 சதவீதம் அதிகரிப்பு.

கோல்கேட் பாமோலிவ் இந்தியா நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.316.22 கோடி ஈட்டியுள்ளது.

பிரபல பற்பசை தயாரிப்பு நிறுவனமான கோல்கேட் பாமோலிவ் இந்தியா நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. கோல்கேட் பாமோலிவ் இந்தியா நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.316.22 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 2.27  சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் கோல்கேட் பாமோலிவ் இந்தியா நிறுவனம் நிகர லாபமாக ரூ.323.57 கோடி ஈட்டியிருந்தது.

கோல்கேட்-பாமோலிவ் நிகர லாபம் ரூ.233 கோடி… வருவாய் 12 சதவீதம் அதிகரிப்பு.

2023 மார்ச் காலாண்டில் கோல்கேட் பாமோலிவ் இந்தியா நிறுவனம் மொத்தம் வருவாயாக ரூ.1,370.98 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 4.64 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் கோல்கேட் பாமோலிவ் இந்தியா நிறுவனம் வருவாயாக ரூ.1,291.21 கோடி ஈட்டியிருந்தது. 2023 மார்ச் காலாண்டில் கோல்கேட் பாமோலிவ் இந்தியா நிறுவனத்தின் மொத்த செலவினம் 2.82 சதவீதம் உயர்ந்து ரூ.942.92 கோடியாக உயர்ந்துள்ளது.

 கோல்கேட்-பாமோலிவ் இந்தியா

கோல்கேட் பாமோலிவ் இந்தியா நிறுவனம் 2022-23ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.21 இரண்டாவது இடைக்கால டிவிடெண்டாக வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று  பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, கோல்கேட் பாமோலிவ் இந்தியா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.12 சதவீதம் உயர்ந்து ரூ.1,626.30ஆக இருந்தது.