சிப்லா லாபம் ரூ.526 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.8.50 டிவிடெண்ட்..

 
மருந்து விற்பனை அமோகம்… லாபமாக ரூ.566 கோடி அள்ளிய சிப்லா

சிப்லா நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.526 கோடி ஈட்டியுள்ளது. 

மருந்து துறையை சேர்ந்த நிறுவனமான சிப்லா தனது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. சிப்லா நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.526 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 45 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் சிப்லா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.362 கோடி ஈட்டியிருந்தது.

மருந்து விற்பனை அமோகம்… லாபமாக ரூ.566 கோடி அள்ளிய சிப்லா

2023 மார்ச் காலாண்டில் சிப்லா நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.5,739 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 9 சதவீதம் அதிகமாகும். சிப்லா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.8.50 இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது.

மருந்து விற்பனை அமோகம்… லாபமாக ரூ.566 கோடி அள்ளிய சிப்லா

2023 மார்ச் காலாண்டில் சிப்லா நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு  முதலீடுகள் 15 சதவீதம் அதிகரித்து ரூ.371 கோடியாக உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, சிப்லா நிறுவன பங்கின்  விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.29 சதவீதம் குறைந்து ரூ.922.80ஆக இருந்தது.