சியட் லாபம் ரூ.132 கோடி.. ஈக்விட்டி பங்குகளுக்கு 120 சதவீதம் டிவிடெண்ட்..

 
சியட் லிமிடெட்

சியட் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.132.42 கோடி ஈட்டியுள்ளது. 

வாகன டயர் தயாரிப்பு நிறுவனமான சியட் லிமிடெட் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. சியட் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.132.42 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் ஐந்து மடங்குக்கும் அதிகமாகும். அந்த காலாண்டில் சியட் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.25.43 கோடி ஈட்டியிருந்தது.

சியட்

2023 மார்ச் காலாண்டில் சியட் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.2,874.82 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் அதிகமாகும். சியட் நிறுவனம் 2022 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.2,591.99 கோடி ஈட்டியிருந்தது. 2023 மார்ச் காலாண்டில் சியட் நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.2,698.88 கோடியாக உயர்ந்துள்ளது. 

சியட்

சியட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கு ஈக்விட்டு பங்குகளுக்கு 120 சதவீதம் டிவிடெண்ட் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, சியட் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.94 சதவீதம் உயர்ந்து ரூ.1,845.55ஆக இருந்தது.