சொன்னா நம்புங்க.. இன்னும் 3 வருஷத்துல பி.எஸ்.என்.எல். நிறுவனம் லாபத்தை கொட்டும்.. நாடாளுமன்ற குழு

சொன்னா நம்புங்க.. இன்னும் 3 வருஷத்துல பி.எஸ்.என்.எல். நிறுவனம் லாபத்தை கொட்டும்.. நாடாளுமன்ற குழு

2023-24ம் நிதியாண்டுக்குள் மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் லாப பாதைக்கு திரும்பும் என்று நாடாளுமன்ற குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு சேவையில் மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. பல பத்தாண்டுகளாக தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக தொடர் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு புத்துயிர் கொடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

சொன்னா நம்புங்க.. இன்னும் 3 வருஷத்துல பி.எஸ்.என்.எல். நிறுவனம் லாபத்தை கொட்டும்.. நாடாளுமன்ற குழு
எம்.டி.என்.எல்.

விருப்ப ஓய்வு திட்டம், 4ஜி அலைக்கற்றைக்கு ஆதரவு, சொத்துக்களை பணமாக்குதல், பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் இணைப்பு உள்ளிட்ட பி.எஸ்.என்.எல்.-எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்களுக்கான புத்துயிர் பேக்கேஜைக்கு 2019 அக்டோபரில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

சொன்னா நம்புங்க.. இன்னும் 3 வருஷத்துல பி.எஸ்.என்.எல். நிறுவனம் லாபத்தை கொட்டும்.. நாடாளுமன்ற குழு
பி.எஸ்.என்.எல்.

இந்த சூழ்நிலையில் தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 2023-24ம் நிதியாண்டு முதல் பி.எஸ்.என்.எல். லாப பாதைக்கு திரும்பும். இது வருவாயை முழுமையாக உணர்ந்து கொள்வது மற்றும் சேவைகளிலிருந்து பணப்புழக்கம் மற்றும் நில சொத்துக்களை பணமாக்குதல் போன்றவற்றை பொறுத்தது. மறுமலர்ச்சி தொகுப்பை செயலாக்கும் கட்டத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஆண்டு செலவினம் ரூ.34,400 கோடியிலிருந்து ரூ.24,687 கோடியாக குறைந்தது. அதேசமயம், இன்னும் 4ஜி சேவைகளை தொடங்காததால் வருவாய் வளர்ச்சி அடையவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.