கொரோனா காலத்திலும் சொகுசு கார்கள் விற்பனை அமோகம்.. பி.எம்.டபிள்யூ., ஆடி நிறுவனங்கள் ஹேப்பி

 
பி.எம்.டபிள்யூ. கார்

கடந்த 2021ம் ஆண்டில் பி.எம்.டபிள்யூ., ஆடி ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை சிறப்பாக இருந்தது.

சர்வதேச அளவில் சொகுசு கார்கள் தயாரிப்பில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனம் ஜெர்மனை சேர்ந்த பி.எம்.டபிள்யூ. (பேரிஷே மோட்டோரன் வெர்கே ஏஜி) கடந்த  2021ம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 8,876 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2020ம்  ஆண்டைக் காட்டிலும் 34 சதவீதம் அதிகமாகும். அந்த ஆண்டில் பி.எம்.டபிள்யூ. மொத்தம் 6,604 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

ஆடி

ஜெர்மனை சேர்ந்த சொகுசு கார்கள் தயாரிப்பு நிறுவனமான ஆடி, 2021ம் ஆண்டில் இந்தியாவில் 3,293 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2020ம் ஆண்டைக் காட்டிலும் 2 மடங்கு அதிகமாகும். 2020ம் ஆண்டில் ஆடி இந்தியா நிறுவனம் மொத்தம் 1,639 கார்களை விற்பனை செய்து இருந்தது.

கியா

தென்கொரியாவை சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான கியாவின் துணை நிறுவனமான கியா இந்தியா, 2021ம் ஆண்டில் நம் நாட்டில் மொத்தம் 2.27 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2020ம் ஆண்டில் கியா இந்தியா நிறுவனம் மொத்தம் 1.77 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது. ஆக, கடந்த 2021ம் ஆண்டில் கியா இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை 28 சதவீதம் அதிகரித்துள்ளது.