பயோகான் லாபம் ரூ.313 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.1.50 இறுதி டிவிடெண்ட்

 
பயோகான்

பயோகான் நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.313 கோடி ஈட்டியுள்ளது. 

மருந்து நிறுவனமான பயோகான் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. பயோகான் நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.313 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 31.3 சதவீதம் அதிகமாகும். கடந்த 2022-23ம் நிதியாண்டில் பயோகான் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ463 கோடி ஈட்டியுள்ளது.

பயோகான்

2023 மார்ச் காலாண்டில் பயோகான் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.3,774 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 57 சதவீதம் அதிகமாகும். கடந்த 2022-23ம் நிதியாண்டில் பயோகான் நிறுவனத்தின் வருவாய் 37 சதவீதம் உயர்ந்து ரூ.11,174 கோடியாக அதிகரித்துள்ளது.

பயோகான்

பயோகான் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.1.50 இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, பயோகான் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.31 சதவீதம் உயர்ந்து ரூ.243.00ஆக இருந்தது.