பி.எச்.இ.எல். வருவாய் ரூ.5,263 கோடி.. லாபம் 55 சதவீதம் வளர்ச்சி..

 
பி.எச்.இ.எல்.

பி.எச்.இ.எல். நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.42 கோடி ஈட்டியுள்ளது. 

பொதுத் துறையை சேர்ந்த நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பி.எச்.இ.எல்.) அண்மையில் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. பி.எச்.இ.எல். நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.42 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 55 சதவீதம் அதிகமாகும். அதேசமயம் 2022 செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது பி.எச்.இ.எல். நிறுவனத்தின் நிகர லாபம் 250 சதவீதம் உயர்ந்துள்ளது.

பி.எச்.இ.எல்.

2022 டிசம்பர் காலாண்டில் பி.எச்.இ.எல்.  நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.5,263 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 2 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் பி.எச்.இ.எல். நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.5,136 கோடி ஈட்டியிருந்தது.  2022 டிசம்பர் காலாண்டில் பி.எச்.இ.எல்.  நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.5,320 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டில் ரூ.5,270 கோடியாக இருந்தது.

பி.எச்.இ.எல்.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது. பி.எச்.இ.எல். நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 4.19 சதவீதம் உயர்ந்து ரூ.78.06ஆக இருந்தது.