வாகன விற்பனை அமோகம்… டிசம்பர் காலாண்டில் ரூ.1,556 கோடி லாபம் ஈட்டிய பஜாஜ் ஆட்டோ

வாகன விற்பனை அமோகம்… டிசம்பர் காலாண்டில் ரூ.1,556 கோடி லாபம் ஈட்டிய பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,556.3 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,556.3 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 23.4 சதவீதம் அதிகமாகும்.

வாகன விற்பனை அமோகம்… டிசம்பர் காலாண்டில் ரூ.1,556 கோடி லாபம் ஈட்டிய பஜாஜ் ஆட்டோ
பஜாஜ் இரு சக்கர வாகனங்கள்

2020 டிசம்பர் காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வருவாய் ரூ.8,910 கோடி ஈட்டியுள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு காலாண்டின் அதிகபட்ச வருவாயாகும். 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் கடந்த காலாண்டில் வருவாய் 16.6 சதவீதம் அதிகமாகும்.

வாகன விற்பனை அமோகம்… டிசம்பர் காலாண்டில் ரூ.1,556 கோடி லாபம் ஈட்டிய பஜாஜ் ஆட்டோ
பஜாஜ் ஷோரூம்

டிசம்பர் காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகன விற்பனை அளவு அடிப்படையில் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த காலாண்டில் மோட்டார் சைக்கிள் ஏற்றுமதி 26 சதவீதமும், உள்நாட்டில் மோட்டார் சைக்கிள் விற்பனை 8 சதவீதம் அதிகரித்துள்ளது.