அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லாபம் ரூ.553 கோடி.. வருவாய் 22 சதவீதம் அதிகம்..

 
டி மார்ட்

அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனம் 2021 டிசம்பர் காலாண்டில் ஒட்டுமொத்த முறையில் நிகர லாபமாக ரூ.553 கோடி ஈட்டியுள்ளது. 

டி-மார்ட் கடைகளின் (சூப்பர் மார்க்கெட்) உரிமையாளரான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனம் 2021 டிசம்பர் காலாண்டில் ஒட்டுமொத்த முறையில் நிகர லாபமாக ரூ.553 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 23.71 சதவீதம் அதிகமாகும். 2020 செப்டம்பர் காலாண்டில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் ஒட்டுமொத்த அளவில் நிகர லாபமாக ரூ.447 கோடி ஈட்டியிருந்தது.

டி மார்ட்

2021 டிசம்பர் காலாண்டில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் ஒட்டு மொத்த அளவில் வருவாயாக ரூ.9,218 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 22.22 சதவீதம் அதிகமாகும். 2020 டிசம்பர் காலாண்டில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் ஒட்டு மொத்த அளவில் வருவாயாக ரூ.7,542 கோடி ஈட்டியிருந்தது. டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி டிமார்ட் மொத்தம் 263 ஸ்டோர்களை கொண்டுள்ளது என நிறுவனம் முந்தைய வணிக புதுப்பில் தெரிவித்து இருந்தது.

டி மார்ட்

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்ததுபோது டிமார்ட் (அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்) நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.54 சதவீதம் உயர்ந்து ரூ.4,730.85ஆக இருந்தது.