ஏசியன் பெயிண்ட்ஸ் லாபம் ரூ.1,234 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.21.25 இறுதி டிவிடெண்ட்..

 
ஏசியன் பெயிண்ட்ஸ்

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,234 கோடி ஈட்டியுள்ளது.

பெயிண்ட் தயாரிப்பு நிறுவனமான ஏசியன் பெயிண்ட்ஸ் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,234 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 45 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.850 கோடி ஈட்டியிருந்தது.

வருவாயும் குறைந்தது, லாபமும் குறைந்தது.. கவலையில் ஏசியன் பெயிண்ட்ஸ்

2023 மார்ச் காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.8,787 கோடி ஈட்டியுள்ளது. 2022 மார்ச் காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.7,893 கோடி ஈட்டியிருந்தது. ஆக, 2023 மார்ச் காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 11 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

ஏசியன் பெயிண்ட்ஸ்

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.21.25 இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்த போது, ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.23 சதவீதம் குறைந்து ரூ.3,131.30ஆக இருந்தது.