கை கொடுக்காத பண்டிகை காலம்.. அசோக் லேலண்ட், பஜாஜ் வாகன விற்பனை மந்தம்

 
அசோக் லேலண்ட்

கடந்த டிசம்பரில் அசோக் லேலண்ட் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை சரிவு கண்டது. அதேசமயம், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன விற்பனை அதிகரித்துள்ளது.

இந்துஜா குழுமத்தின் துணை நிறுவனமான அசோக் லேலண்ட் கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 12,518 வர்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 2 சதவீதம் குறைவாகும். 2020 டிசம்பர் மாதத்தில் அசோக் லேலண்ட் நிறுவனம் மொத்தம் 12,760 வர்த்தக வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

பஜாஜ் ஆட்டோ

நாட்டின் முன்னணி இரு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 3.62 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2020 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 3 சதவீதம் குறைவாகும். அந்த மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 3.72 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

டொயோட்டா

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 10,832 வாகனங்களை விற்பனை  செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 45 சதவீதம் அதிகமாகும். 2020 டிசம்பர் மாதத்தில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம்  மொத்தம் 7,487 வாகனங்களை  விற்பனை செய்து இருந்தது.