அசோக் லேலண்ட் லாபம் ரூ.751 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.2.60 டிவிடெண்ட்..

 
அசோக் லேலண்ட்

அசோக் லேலண்ட் நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.751.41 கோடி ஈட்டியுள்ளது. 

வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அசோக் லேலண்ட் நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.751.41 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 17 சதவீதம் அதிகமாகும்.

லாக்டவுனால் பாதிப்பு… அசோக் லேலண்ட் நிறுவனத்துக்கு ரூ.389 கோடி நஷ்டம்..

2023 மார்ச் காலாண்டில் அசோக் லேலண்ட் நிறுவனம்  செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாயாக ரூ.11,626 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 33 சதவீதம் அதிகமாகும். 2023 மார்ச் காலாண்டில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வட்டி செலவினம் உள்பட மொத்த செலவினம் ரூ.10,597 கோடியாக உயர்ந்துள்ளது. 2022 மார்ச் காலாண்டில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.8,080.2 கோடியாக இருந்தது.

லாக்டவுனால் பாதிப்பு… அசோக் லேலண்ட் நிறுவனத்துக்கு ரூ.389 கோடி நஷ்டம்..

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.2.60 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, அசோக் லேலண்ட் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.22 சதவீதம் குறைந்து ரூ.150.30ஆக இருந்தது.