அதானி போர்ட்ஸ் வருவாய் 24 சதவீதம் அதிகரிப்பு.. லாபம் ரூ.2,115 கோடி..

அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவனம் 2023 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,115 கோடி ஈட்டியுள்ளது.
அதானி குழுமத்தை சேர்ந்த அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவனம் 2023 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,115 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 83 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,158 கோடி ஈட்டியிருந்தது.
2023 ஜூன் காலாண்டில் அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.6,248 கோடி ஈட்டியுள்ளது. 2022 ஜூன் காலாண்டில் அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.5,058 கோடி ஈட்டியுள்ளது. ஆக, கடந்த ஜூன் காலாண்டில் அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 24 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.02 சதவீதம் உயர்ந்து ரூ.823.55ஆக இருந்தது.