விப்ரோ வருவாய் 16 சதவீதம் வளர்ச்சி.. லாபம் ரூ.2,564 கோடி..

 
விப்ரோ

விப்ரோ நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,563.6 கோடி ஈட்டியுள்ளது. 

நாட்டின் 4வது பெரிய சாப்ட்வேர் நிறுவனமான விப்ரோ தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. விப்ரோ நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,563.6 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 20.93 சதவீதம் குறைவாகும். 2021 ஜூன் காலாண்டில் விப்ரோ நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,242.6 கோடி ஈட்டியிருந்தது.

விப்ரோ

2022 ஜூன் காலாண்டில் ரூபாய் மதிப்பு அடிப்படையில்  விப்ரோ நிறுவனம் ஒட்டு மொத்த அளவில்  மொத்த வருவாயாக ரூ.22,001  கோடி ஈட்டியுள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 15.51 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் விப்ரோ நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் மொத்த வருவாயாக ரூ.19,045 கோடி ஈட்டியிருந்தது. டாலர் மதிப்பு அடிப்படையில், விப்ரோ நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 13.3 சதவீதம் உயர்ந்து  270 கோடி டாலராக இருந்தது.

விப்ரோ

கடந்த ஜூன் காலண்டு இறுதி நிலவரப்படி, விப்ரோ நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 15,446ஆக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, விப்ரோ நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.46 சதவீதம் உயர்ந்து ரூ.414.10ஆக இருந்தது.