வா டெக் வாபாக் வருவாய் அதிகரிப்பு.. லாபம் ரூ25 கோடி....

 
வா டெக் வாபாக்

வா டெக் வாபாக் நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ25.44 கோடி ஈட்டியுள்ளது. 

தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனமான வா டெக் வாபாக் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. வா டெக் வாபாக் நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ25.44 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 ஜூன்  காலாண்டைக் காட்டிலும் இரு மடங்குக்கும் அதிகமாகும். அந்த காலாண்டில் வா டெக் வாபாக் நிறுவனம் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.10.40 கோடி ஈட்டியிருந்தது.

வா டெக் வாபாக்

2022 ஜூன் காலாண்டில் வா டெக் வாபாக் நிறுவனம் தனிப்பட்ட முறையில் மொத்த வருவாயாக ரூ.517.44 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சிறிது அதிகமாகும். 2021 ஜூன் காலாண்டில் வா டெக் வாபாக் நிறுவனம் தனிப்பட்ட முறையில் மொத்த வருவாயாக ரூ.480.56 கோடி ஈட்டியிருந்தது.

வா டெக் வாபாக்

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, வா டெக் வாபாக் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 5.46 சதவீதம் உயர்ந்து ரூ.264.50ஆக இருந்தது.