டெக் மகிந்திரா வருவாய் 25 சதவீதம் வளர்ச்சி.. லாபம் ரூ.1,132 கோடி..

 
டெக் மகிந்திரா

டெக் மகிந்திரா நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,132 கோடி ஈட்டியுள்ளது. 

நாட்டின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் ஒன்றான டெக் மகிந்திரா தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. டெக் மகிந்திரா நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,132 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 16.4 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் டெக் மகிந்திரா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,353.20 கோடி ஈட்டியிருந்தது.

டெக் மகிந்திரா

2022 ஜூன் காலாண்டில் டெக் மகிந்திரா நிறுவனம் வருவாயாக ரூ.12,708 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 24.6 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் டெக் மகிந்திரா நிறுவனத்தின் வருவாய் ரூ.10,197.60 கோடியாக இருந்தது. டாலர் மதிப்பு அடிப்படையில் கடந்த ஜூன் காலாண்டில் டெக் மகிந்திரா நிறுவனத்தின் வருவாய் 18 சதவீதம் உயர்ந்து 163.20 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

டெக் மகிந்திரா

கடந்த ஜூன் காலாண்டு நிலவரப்படி, டெக் மகிந்திரா நிறுவனத்தில் பணியாற்றும் சாப்ட்வேர் நிபுணர்களின் எண்ணிக்கை 88,030ஆக உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, டெக் மகிந்திரா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.83 சதவீதம் உயர்ந்து ரூ.1,007.80ஆக இருந்தது.