வருவாய் அதிகரித்தும் நஷ்டத்தை சந்தித்த டாடா மோட்டார்ஸ்.. செப்டம்பர் காலாண்டில் ரூ.945 கோடி நஷ்டம்

 
டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு  2022 செப்டம்பர் காலாண்டில்  ஒட்டு மொத்த அளவில் ரூ.944.61 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.944.61 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 2021 செப்டம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.4,441.57 கோடி நிகர இழப்பு ஏற்பட்டு இருந்தது.

டாடா மோட்டார்ஸ்

2022 செப்டம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ்  நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.79,611.3 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 29.7 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.61,378.82 கோடி ஈட்டியிருந்தது. கடந்த செப்டம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு வாகன விற்பனை 19 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் உள்நாட்டில் 1.42 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்துள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 69 சதவீதம் அதிகமாகும். மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 4.80 சதவீதம் குறைந்து ரூ.412.20ஆக இருந்தது.